!- START disable copy paste -->

Saturday, May 16, 2015



76.அந்தியில் சந்திரன்



வருடம்  
1977                             
பாடலாசிரியர்
கண்ணதாசன்
படம்     
என்ன தவம் செய்தேன்            
இசை
எம்.எஸ்.விஸ்வநாதன்                                                   
பாடியவர்
கே.ஜே.ஜேசுதாஸ் & வாணிஜயராம்

                 
                 
                           பாடல் வரிகள்

அந்தியில் சந்திரன் வருவதேன் அது
ஆனந்த போதையைத் தருவதேன்
சந்திரன் வருவது ஒளி தர
அது தமிழுக்கு ஆயிரம் கவி தர (அந்தியில்)

இலைகளில் இளந்தென்றல் படிப்பதென்னவோ
அது இலையென்று தெரியாத குழப்பமல்லவோ
மலைகளில் வெண்மேகம் விழுவதென்னவோ
அது மரியாதை பொன்னாடை தருவதல்லவோ
அது மரியாதை பொன்னாடை தருவதல்லவோ (அந்தியில்)

பெண் மனம் ஒன்றோடு இணைவதென்னவோ
அது பிழையாக இருந்தாலும் இருக்குமல்லவோ
சம்மதம் தருவதில் தொல்லை என்னவோ
அதை தானாக கேளாது பெண்மை அல்லவோ
அதை தானாக கேளாது பெண்மை அல்லவோ (அந்தியில்)

தலைவனின் சந்தோஷம் தலைவனல்லவோ
அது இருபேரும் நினைத்தால்தான் பிறக்குமல்லவோ
இதுவரை என் கேள்வி புரிந்ததல்லவோ
சரி இத்தோடு உன் கேள்வி முடிந்ததல்லவோ
சரி இத்தோடு உன் கேள்வி முடிந்ததல்லவோ  (அந்தியில்)

No comments:

Post a Comment