!- START disable copy paste -->

Saturday, May 16, 2015



74.அந்தரங்கம் நானறிவேன்



வருடம்  
1973                        
பாடலாசிரியர்
கண்ணதாசன்
படம்     
கங்கா கெளரி             
இசை
எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்
பி.பி.எஸ். & எஸ்.ஜானகி

                 
                 
                           பாடல் வரிகள்

அந்தரங்கம் நானறிவேன் சிந்தும் இளம் புன்னகையே
மந்திரத்தில் நான் விழுந்தேன்
மாதவனின் தோள்களிலே வந்த வழி
நானறியேன் மங்கை என்னை நீயறிவாய் (அந்த)

தேடி வந்த சிலையைக் கண்டு மூடிக் கொண்ட கண்கள் –இந்த
தேவனையும் விடுவதில்லை ஊடல் கொண்ட பெண்கள்

மணந்தவரை யாரிடத்தும் தருவதில்லை நாங்கள்
தினந்தோறும் நாடகங்கள் ஆடுவது நீங்கள்
என் மன்னவா............உண்மை சொல்லவா.............
பெண்மை அல்லவா .............என்னை வெல்லவா (அந்தரங்கம்)

தாமரையில் குடியிருக்கும் தங்கமலர் தேவி – உன்னை
தான் நினைந்து தழுவிக் கொள்ளும் தேவன் இவன் ஆவி

அறிவேனே சாகசங்கள் இது வரையில் போதும்
அலை மோதும் காதலுடன் பூமகளை பாரும்
என் மன்னவா............உண்மை சொல்லவா.............
பெண்மை அல்லவா .............என்னை வெல்லவா (அந்தரங்கம்)




No comments:

Post a Comment