!- START disable copy paste -->

Saturday, May 16, 2015



73.அந்தமானைப் பாருங்கள்



வருடம்   
1978                                       
பாடலாசிரியர்
கண்ணதாசன்
படம்    
அந்தமான் காதலி                       
இசை
எம்.எஸ்.விஸ்வநாதன்                                      
பாடியவர்
கே.ஜே.ஜேசுதாஸ்.& வாணிஜெயராம்           

.          
                     
                         பாடல் வரிகள்

அந்த மானைப் பாருங்கள் அழகு இளம்
பாவை என்னோடு உறவு!
அந்த தென்னை தாலாட்டும் இளநீர்-இந்த
தீவில் பெண் தூவும் பன்னீர்    (அந்த மானைப்)

இந்த மேகக் கூந்தல் கலைகள்-கடல்
நீரில் ஆடும் அலைகள்
உந்தன் மோக ராக நாதம்-இந்த
ஏழை பாடும் வேதம்!

அந்தமானும் உன்போல அழகு இளம்
பாவை உன்னோடு உறவு அந்த
தென்னை தாலாட்டும் இளநீர்-இந்த
காதல் பெண் தூவும் பன்னீர்   (அந்த மானைப்)

நல்ல பூவும் தேனும் திரண்டு-சுகம்
பொங்கும் உள்ளங்கள் இரண்டு-இது
ராஜ யோக சொர்க்கம்-இனி
பேச என்ன  வெட்கம்        (அந்த மானைப்)

இது ஏக்கம் தீர்க்கும் தனிமை-என்ன
இன்பம் அம்மா உன் இளமை-இந்த
தேவி மேனி மஞ்சள்-நான்
தேடி ஆடும் ஊஞ்சல்

உங்கள் கைகள் என்ற சிறையில்-வரும்
கால காலங்கள் வரையில்-நான்
வாழவேண்டும் உலகில்-அந்த
மானைப்போல அருகில்     (அந்த மானைப்)

No comments:

Post a Comment