!- START disable copy paste -->

Saturday, May 16, 2015



72.அந்தப்புரத்தில் ஒரு



வருடம்   
1977                                  
பாடலாசிரியர்
புலமைப்பித்தன்              
படம்    
தீபம்                             
இசை
இளையராஜா    
பாடியவர்
டி.எம்.எஸ். & எஸ்.ஜானகி

.   .         

                        பாடல் வரிகள்

அந்தப்புரத்தில் ஒரு மகராணி
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்

சாமந்தி பூக்கள் மலர்ந்தன
இரு சந்தன தேர்கள் அசைந்தன
பாவை இதழ் இரண்டும் கோவை
அமுத ரசம் தேவை
என அழைக்கும் பார்வையோ

அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி
ஆசை கனிந்துவர அவன் பார்த்தான்
அன்னம் தலை குனிந்து நிலம் பார்த்தாள்

சங்கு வண்ண கழுத்துக்கு தங்கமாலை
அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை
குங்குமத்தின் இதழ் சின்னம் தந்த காலை
அவன் கொள்ளை கொள்ள துடித்தது என்ன பார்வை
அது பார்வையல்ல பாஷையென்று கூறடி என்றாள் (அந்தப்புரத்தில்)

முத்துச்சிப்பி திறந்தது விண்ணை பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
பித்தம் ஒன்று வளர்ந்தது முத்தம் கேட்டு
அவள் நெஞ்சில் வந்து பிறந்திடும் தொட்டில் பாட்டு
அங்கே தென் பொதிகை தென்றல் வந்து பாடிடும் பாட்டு (அந்தப்புரத்தில்)

ஆராரிரோஆராரிராராரிரோ
ஆரிராரோ ஆராரிரோ
ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ

No comments:

Post a Comment