!- START disable copy paste -->

Saturday, May 16, 2015



62.அதிசய இராகம் ஆனந்த ராகம்


வருடம்   
1975                                        
பாடலாசிரியர்
கண்ணதாசன்
படம்   
அபூர்வராகங்கள்                     
இசை
எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்
கே.ஜே.ஜேசுதாஸ்

.               
            
                           பாடல் வரிகள் 


அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்  (அதிசய)

வசந்த காலத்தில் மழை தரும் மேகம் - அந்த
மழை நீரருந்த மனதினில் மோகம்....                                         இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இந்திர லோகத்து சக்கரவாகம்  (அதிசய)

பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் - அந்த
தேவதை கிடைத்தால் அது என் யோகம்

ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி
அவளொரு பைரவி அவளொரு பைரவி  (அதிசய)


No comments:

Post a Comment