!- START disable copy paste -->

Saturday, May 16, 2015




60.அத்தைக்கு பிறந்தவள்


வருடம்   
1986                              
பாடலாசிரியர்
வைரமுத்து
படம்    
அன்புள்ள அப்பா              
இசை
சங்கர் கணேஷ்           
பாடியவர்
எஸ்.பி.பி. & எஸ்.பி.ஷைலஜா 

.        

                        பாடல் வரிகள்

அத்தைக்கு பிறந்தவள் மெத்தைக்கு
வளர்ந்தவள் நீதானே
பள்ளிக் கொள்ள வா..........மானே.........
உணர்ச்சி தவிப்பில் உதட்டு
நெருப்பில் உருகி போனேனே

அத்தைக்கு பிறந்தவள் மெத்தைக்கு
வளர்ந்தவள் நான்தானே
பள்ளியறை வந்தேனே
உணர்ச்சி தவிப்பில் உதட்டு
நெருப்பில் உருகி போனேனே   (அத்தைக்கு)

உனக்குத்தான் என்று வளர்ந்த ரோஜா
உன்னைக் கேட்டா பூத்தது
மரங்கள் எல்லாம் கடிதம்
போட்டா பறவை வருகிறது

பறவை பறந்து பழக வந்தால்
இலைகள் கனியை மூடுது
விருந்துக்கழைத்து விலங்கு
போட்டால் என்ன அருந்துவது

நான் சொல்கிறேன் பகலில் மட்டும் கூடாது
நான் கேட்கிறேன் பகலிரவு யார் பார்த்தது  (அத்தைக்கு)

பள்ளியறை வந்து பாடம் படிக்க
மனைவிதான் ஒரு மாணவி
இருட்டில் படிக்கும் திருட்டு பாடம்
எனக்கு தெரியாது

விளக்கு வெளிச்சம் தேவையில்லை
விழியின் வெளிச்சம் போதுமே
எனக்கு நீயும் உனக்கு நானும் பாடம் ஆவோமே
நான் தாங்கினேன் அதற்கு என்னை பாராட்டவா
பாராட்டுவேன் பரிசு தந்து தாலாட்டவா  (அத்தைக்கு)





No comments:

Post a Comment