!- START disable copy paste -->

Saturday, May 16, 2015



58.அத்தை மகனே போய்


வருடம்   
1962                                 
பாடலாசிரியர்
கண்ணதாசன்   
படம்    
பாதக்காணிக்கை                 
இசை
விஸ்வநாதன்  ராமமூர்த்தி               
பாடியவர்
பி.சுசீலா         


  
                             பாடல் வரிகள்

அத்தை மகனே போய் வரவா
அம்மான் மகனே போய் வரவா
உந்தன் மனதைக் கொண்டு செல்லவா
எந்தன் நினைவைத் தந்து செல்லவா   (அத்தை)

மல்லிகை மலர் சூடி காத்து நிற்கவா
மாலை இளம் தென்றல் தன்னை தூது விடவா
நல்லதோர் நாள் பார்த்து சேதி சொல்லவா
நாட்டோரை சாட்சி வைத்து வந்து விடவா
நாட்டோரை சாட்சி வைத்து வந்து விடவா  (அத்தை)

பெண் பார்க்கும் மாப்பிள்ளை முகம் பார்க்கவா
முகம் பார்க்க முடியாமல் நிலம் பார்க்கவா
நிலம் பார்த்து மெதுவாக உனை நாடவா
உனை நாடி உனை நாடி ....
உனை நாடி உனை நாடி உறவாடவா  (அத்தை)

No comments:

Post a Comment