!- START disable copy paste -->

Saturday, May 16, 2015



57.அத்தை மகள் ரத்தினத்தை (பெண்)


வருடம்   
1964                                   
பாடலாசிரியர்
கண்ணதாசன் 
படம்    
பணக்கார குடும்பம்                
இசை
விஸ்வநாதன் ராமமுர்த்தி 
பாடியவர்
பி.சுசீலா

                             
                            பாடல் வரிகள்

அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா

முத்து முத்துப் பேச்சு கத்தி விழி வீச்சு
அத்தனையும் மறந்தாரா
முண்னழகு தூங்க பின்னழகு ஏங்க
பெண்ணழகை விடுவாரா பெண்ணழகை விடுவாரா

முத்திரையைப் போட்டு சித்திரத்தை வாட்டி
நித்திரையைக் கெடுப்பாரா
மூவாசை வெறுத்து ஊராரை மறந்து
முனிவரும் ஆவாரா       (அத்தை)

கொட்டு முழக்கொடு கட்டழகு மேனி
தொட்டு விட மனமில்லையா
கட்டிலுக்குப் பாதி தொட்டிலுக்குப் பாதி
கருணை வரவில்லையா கருணை வரவில்லையா

விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும்
கட்டாமல் விடுவேனா
மேடைகளில் நின்று தோழர்களைக் கண்டு
சொல்லாமல் வருவேனா  (அத்தை)

No comments:

Post a Comment