!- START disable copy paste -->

Saturday, May 16, 2015



53.அத்தான் நிறம் சிவப்பு


வருடம்  
1969                        
பாடலாசிரியர்
கண்ணதாசன்       
படம்    
நிறைக்குடம்               
இசை
வி.குமார்                                    
பாடியவர்
பி.சுசீலா   

                            
                            பாடல் வரிகள்

அத்தான் நிறம் சிவப்பு - அந்த
ஆங்கிலேயர் போல் உடுப்பு
கூந்தல் கொஞ்சம் வெளுப்பு -அவர்
கூலிங் கிளாஸ்தான் கருப்பு
முன்னே நின்னு பாத்தா மூச்சு வருமா
பின்னே நின்னு பாத்தா பேச்சு வருமா  (அத்தான்)

கல்யாணப் பெண்ணைப் பார்த்து நாணம் கொள்வாரோ
கைத்தறி சேலை வாங்கிக்  கட்டிக் கொள்ளுவரோ
அடியம்மா உன் அத்தான் அவன் யாரோ வைக்கப் போரோ
முன்னே நின்னு பாத்தா மூச்சு வருமா
பின்னே நின்னு பாத்தா பேச்சு வருமா (அத்தான்)

பொன்னாலே கட்டில் போட்டால் அய்யோ என்பாரோ
பூப்போலே முத்தம் தந்தால் சத்தமிடுவாரோ
கைப்பட்டால் நீ தொட்டால் அவர் காலைப் பிடிப்பாரோ
முன்னே நின்னு பாத்தா மூச்சு வருமா
பின்னே நின்னு பாத்தா பேச்சு வருமா (அத்தான்)

அப்பாவி அத்தான் உன்னை அக்கா என்பாரோ
அவசரக் கோலத்தோடு அம்மா என்பாரோ
அழுகின்ற பிள்ளைப்போல தூக்கச் சொல்வாரோ
அடியம்மா உனை சும்மா தாலாட்ட சொல்லுவாரோ
அடியம்மா உனை சும்மா பாலூட்ட சொல்லுவாரோ
முன்னே நின்னு பாத்தா மூச்சு வருமா
பின்னே நின்னு பாத்தா பேச்சு வருமா (அத்தான்)



No comments:

Post a Comment