52.அத்தான் என்றேன் முத்து
|
வருடம்
|
1968
|
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
|
படம்
|
கல்லும்
கனியாகும்
|
|
இசை
|
எம்.எஸ்.விஸ்வநாதன்
|
|
பாடியவர்
|
ஏ.எல்.ராகவன்
& பி.சுசீலா
|
பாடல் வரிகள்
நேரம் மாலை நேரம்
நெஞ்சம் மயங்கும் நெஞ்சம்
அத்தான் அத்தான்
அத்தான் அத்தான் ஹும்...
அத்தான் என்றேன்
முத்து முத்தாக
அள்ளிக்கொண்டாய்
கட்டுக் கட்டாக
அம்மானும் பெண்
மானும் ஒன்றோடு ஒன்றானோம் (அத்தான்)
நீலப்பட்டோடும்
நெற்றி பொட்டோடும்
பருவம் கொண்டாடும்
பாதி கண்ணோரம்
அத்தான் என்றாய் முத்து
முத்தாக
அள்ளிக்கொண்டேன்
கட்டுக் கட்டாக
அம்மானும் பெண்
மானும் ஒன்றோடு ஒன்றானோம் (அத்தான்)
கீதா இன்பக்
கனவொன்று நானும் கண்டேன்
பொன்னிறமான அந்தி
மாலை நேரம்
மேகம் கொஞ்சும்
மலைச் சிகரம்- அங்கு
பூச்சுடும்
சிலையாக நின்றாய் அன்பே
பூமாலை சரமாக
வந்தேன் அங்கே
பேச்சில்லை
மூச்சில்லை பார்வையில்லை
பேசு என்றேன்
யாரென்றாய்
மனமே என்றேன்
மறவேன் என்றாய்
அறிவே என்றேன்
உறவே என்றாய் (அத்தான்)
போதும்
நிறுத்துங்கள் கன்னம் சிவக்காதா
இன்னும் கேளுங்கள்
என் கனவை
நீராடும் துறையில்
என் அருகே வந்தாய்
நீ காணும்
பொழுதல்ல மறைவாய் என்றேன்
தேரோடும்
ராஜாங்கம் எதுவோ என்றாய்
திருநாளின் முதல்
நாளில் அறிவாய் என்றேன்
இசையே என்றேன்
இசையாய் நின்றாய்
மனமே என்றேன்
வருவாய் என்றாய் (அத்தான்)
No comments:
Post a Comment