50.அத்தாணி மண்டபத்தில்
வருடம்
|
1976
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
படம்
|
மகராசி
வாழ்க
|
இசை
|
எம்.எஸ்.விஸ்வநாதன்
|
பாடியவர்
|
வாணிஜயராம்
& பி.சுசீலா
|
பாடல் வரிகள்
அத்தாணி
மண்டபத்தில் முத்து முத்து தீபம்
அன்னத்தின் தோகை
போலே வெள்ளி மின்னல் கோலம்
தாய் சொன்ன நீதி
கற்பு என்னும் ஜோதி
தந்தை சொன்ன வேதம்
தன்மான தீபம் (அத்தாணி)
செல்வம் என்பது
வந்த பின்புதான்
இருண்ட வீட்டிலும்
தீபம்
எந்த பாதையும்
சென்று பார்க்கலாம்
வாழ்வில் என்னதான்
பாவம்
இளமையின் வேகம்
இன்பமென்னும் ராகம்
என்ன வந்த போதும்
வந்தவரை யோகம் (அத்தாணி)
கோடிப் பெண்களைப்
பூமி கண்டது
தெய்வமானவள் சீதை
கோடிப்பாதைகள்
மண்ணில் உள்ளன
நேர்மை ஒன்றுதான் பாதை
குலமகளானால் கல்வி
தரும் சாரம்
கலைமகளானால் மனைக்கலங்காரம் (அத்தாணி)
அச்சம் என்பதும்
நாணம் என்பதும்
பஞ்சம் தீர்த்ததே
இல்லை
அந்தி வானத்து
சந்திரன் என
வாழ்ந்து
பார்ப்பதோ தொல்லை
குலமகள்
நாணம் இறைவனின் தீபம்
வழி தவறானால்
பிறந்தது பாவம் (அத்தாணி)
No comments:
Post a Comment