!- START disable copy paste -->

Saturday, May 16, 2015



49.அண்ணன் காட்டிய வழி


வருடம்
1962                                          
பாடலாசிரியர்
கண்ணதாசன்
படம்    
படித்தால் மட்டும் போதுமா         
இசை
எம்.எஸ். விஸ்வநாதன்      
பாடியவர்
டி.எம்.எஸ்.                                   

                         
                       பாடல் வரிகள்

அண்ணன் காட்டிய வழியம்மா - இது
அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா - என்
கையே என்னை அடித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா

தொட்டால் சுடுவது நெருப்பாகும்
தொடாமல் சுடுவது சிரிப்பாகும்
தெரிந்தே கெடுப்பது பகையாகும்
தெரியாமல் கெடுப்பது உறவாகும்
அண்ணன் காட்டிய வழியம்மா

அடைக்கலம் என்றே நினைத்திருந்தேன்
அணைத்தவனே நெஞ்சை எரித்துவிட்டான்
கொடுத்தருள்வாய் என்று வேண்டி நின்றேன்
கும்பிட்ட கைகளை முறித்து விட்டான்
அண்ணன் காட்டிய வழியம்மா

அவனை நினைத்தே நானிருந்தேன் - அவன்
தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான்
இன்னும் அவனை மறக்கவில்லை - அவன்
இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை                                                                                             

அண்ணன் காட்டிய வழியம்மா - இது
அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா என்
கையே என்னை அடித்ததம்மா

No comments:

Post a Comment