48.அண்ணன் ஒரு கோவில் என்றால்
வருடம்
|
1977
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
படம்
|
அண்ணன் ஒரு
கோவில்
|
இசை
|
எம்.எஸ்.விஸ்வநாதன்
|
பாடியவர்
|
எஸ்.பி.பி.
|
பாடல் வரிகள்
பொன்னை வைத்த இடத்தினிலே
பூவை வைத்து பார்ப்பதற்கு
அண்ணன் அன்றி யாருமுண்டோ
இன்னும் ஒரு சொந்தமுண்டோ
அதன் பேர் பாசம் அன்றோ (அண்ணன்)
பூவை வைத்து பார்ப்பதற்கு
அண்ணன் அன்றி யாருமுண்டோ
இன்னும் ஒரு சொந்தமுண்டோ
அதன் பேர் பாசம் அன்றோ (அண்ணன்)
தொட்டிலிட்ட தாயும் இல்லை
தோளில் இட்ட தந்தை இல்லை
கண் திறந்த நேரமுதல்
கை கொடுத்த தெய்வம் அன்றோ
அதன் பேர் பாசமன்றோ (அண்ணன்)
தோளில் இட்ட தந்தை இல்லை
கண் திறந்த நேரமுதல்
கை கொடுத்த தெய்வம் அன்றோ
அதன் பேர் பாசமன்றோ (அண்ணன்)
கண்ணன் மொழி கீதை என்று
கற்றவர்கள் சொன்னதுண்டு
அந்த மொழி எனக்கெதற்கு
அண்ணன் மொழி கீதை அன்றோ
அதன் பேர் பாசமன்றோ (அண்ணன்)
கற்றவர்கள் சொன்னதுண்டு
அந்த மொழி எனக்கெதற்கு
அண்ணன் மொழி கீதை அன்றோ
அதன் பேர் பாசமன்றோ (அண்ணன்)
No comments:
Post a Comment