42.அடியே ஒரு பேச்சுக்கு
வருடம்
|
1971
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
படம்
|
அன்புக்கோர்
அண்ணன்
|
இசை
|
எம்.எஸ்.விஸ்வநாதன்
|
பாடியவர்
|
பி.சுசீலா & எல்.ஆர்.ஈஸ்வரி
|
பாடல் வரிகள்
அடியேய் ஒரு
பேச்சுக்கு சொன்னேன் இது
பெண் புத்திதானே ஒரு நாயகன் முன்னே
நாம் நாயகிதானே
தங்கை என்பதில் சொந்த உரிமை உண்டடி
இதில் தலைவி என்னும் பெயரில்
என்ன பெருமை உண்டடி
நாம் நாயகிதானே
தங்கை என்பதில் சொந்த உரிமை உண்டடி
இதில் தலைவி என்னும் பெயரில்
என்ன பெருமை உண்டடி
அடியேய் ஒரு பேச்சுக்கு சொன்னேன்
இது பெண் புத்திதானே
ஒரு ஆடவன் வந்தால் நாம்
அடிமைகள்தானே
தாயாரும் உன்னைப் போல் தனியாக வாழ்ந்தால்
நீ ஏது உன் அண்ணன் உறவேதடி
மாறாது உறவென்று அண்ணாவைப் பாடி
வாழ்ந்தாலே கல்யாண நினைவேதடி
பெண்டாட்டி ஆனால்தான் கொண்டாட்டமே
பல பெண் வாழ்வில் கல்யாணம் திண்டாட்டமே (ஒரு பேச்சுக்கு)
இன்பங்கள் சரிபாதி துன்பங்கள் பாதி
கொண்டாடும் இல்வாழ்வு குலவாழ்வடி
இன்பங்கள் துன்பங்கள் எங்கென்று தேடி
அங்கெல்லாம் நான் போக முடியாதடி
தள்ளாடும் காலத்தில் அறிவாயடி
அதில் தாய் வீட்டு துணை போல துணை ஏதடி (ஒரு பேச்சுக்கு)
ஆதாரம் நீயென்று அத்தானின் மார்பில்
நீராடும் நிலை போல நிலை ஏதடி
நீராடு நாம் சென்று போராட நேர்ந்தால்
வேரோடும் கண்ணீரில் முடிவேதடி
கண்ணீரும் பெண் சொல்லும் கதைதானடி
அது எந்நாளும் என்
வாழ்வில் கிடையாதடி
அது எந்நாளும் என் வாழ்வில் கிடையாதடி
அது எந்நாளும் என் வாழ்வில் கிடையாதடி
No comments:
Post a Comment