!- START disable copy paste -->

Friday, May 15, 2015



43.அடியே நேற்று பிறந்தவள்



வருடம்  
1968                           
பாடலாசிரியர்
கண்ணதாசன்
படம்    
என் தம்பி                     
இசை
 எம்.எஸ்.விஸ்வநாதன்                                         
பாடியவர்
டி.எம்.எஸ்.& பி.சுசீலா

                            
                            பாடல் வரிகள்

அடியே நேற்று பிறந்தவள் நீயே
நேரம் தெரிந்து வந்தாயே
கண்ணன் பார்த்த ராதை போலே
வண்ணம் கொண்டு வந்தாய் நீயே  (அடியே)

பிறந்தேன் பிறந்தேன் நான் உனக்காக
வளர்ந்தேன் வளர்ந்தேன் சிலை வடிவாக
மலர்ந்தேன் மலர்ந்தேன் தங்க மலராக
இணைந்தேன் கலந்தேன் உந்தன் துணையாக
ஆஹாஹா ஹா...ஹா.ஹாக ஆ...ஆ...

அடடா  நேற்று பிறந்தவள் நானே
நேரம் தெரிந்து வந்தேனே 
கண்ணன் பார்த்த ராதை போலே
வண்ணம் கொண்டு வந்தேன் நானே

ஆணும் பெண்ணும் பிறந்தபோது
ஆசை நெஞ்சம் வந்ததில்லை
காண காண பேச பேச
காதல் தந்தான் கடவுள் வாழ்க

உள்ளம் குளிர மேனி துடிக்க
ஊறும் ஆசை வெள்ளம் பெருக 
கள்வர் போலே மெளனமாக
கலந்து காணும் காதல் வாழ்க   (அடியே)

வாடை காற்றில் வெளியில் நின்றால்
போர்வை போலே தழுவிக்கொண்டு
மார்பின் மீது கண்கள் மூடி
மயக்கம் கொள்ளும் உறவு வாழ்க

என்ன ராதா என்ன தந்தாய்
என்ன நாணம் போதும்  போதும்
என்று கோடி வார்த்தை பேசும்
இன்பமான இரவு வாழ்க   (அடியே)

No comments:

Post a Comment