!- START disable copy paste -->

Friday, May 15, 2015



41.அடியம்மா ராசாத்தி


வருடம்  
1972                                                     
பாடலாசிரியர்
கண்ணதாசன்
படம்    
வசந்த மாளிகை                
இசை
கே.வி.மகாதேவன்             
பாடியவர்
டி.எம்.எஸ். & பி.சுசீலா    .



                       பாடல் வரிகள்

அடியம்மா ராசாத்தி சங்கதி என்ன நீ
அங்கேயே நின்னுக் கிட்டா என் கதியென்ன

அடேயப்பா ராசப்பா சங்கதி என்ன நீ
ஆசையோட அணைச்சிகிட்டா என் கதியென்ன (அடியம்மா)

தை மாசம் ஆரம்பிச்சு வைகாசி வரையிலே
அங்கேயும் இங்கேயும் கைப்பட்ட காயமே
தாளலையே தாங்கலையே நாலு நாளா அது
சந்தோஷம் இல்லையின்னா பேசுவோமா  (அடி)

பொன்னான கோட்டைக் கட்டி உன்னோடு வாழணும்
பூப்போட்ட மெத்தையிலே பூராவும் பேசணும்
எம்மனசு ஏங்குதம்மா என்ன சேதி நீ
ஏதாச்சும் தாடியம்மா மிச்சம் மீதி   (அடியம்மா)

தண்ணீரில் குளிக்கையிலே கண்ணாலே பாத்தேனே
தள்ளாடி தள்ளாடி தலைகீழா விழுந்தியே
தாங்கினியே வாங்கினியே மெல்ல மெல்ல நீ
தந்ததெல்லாம் இப்ப நான் என்ன சொல்ல (அடியம்மா)


No comments:

Post a Comment