!- START disable copy paste -->

Friday, May 15, 2015



39.அடிக்கிற கைதான்



வருடம்   
1959                                                             
பாடலாசிரியர்
மருதகாசி
படம்    
வண்ணக்கிளி                         
இசை
கே.வி.மகாதேவன்   
பாடியவர்
லோகநாதன் & பி.சுசீலா 

                                              
                          பாடல் வரிகள்

அடிக்கிற கைதான் அணைக்கும்
அணைக்கிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்  (அடிக்கிற)

புயலுக்குப் பின்னே அமைதி - வரும்
துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி
இருளுக்குப் பின் வரும் ஜோதி
இதுதான் இயற்கை நியதி
இதுதான் இயற்கை நியதி  (அடிக்கிற)

இறைக்கிற ஊத்தே சுரக்கும் - இடி
இடிக்கிற வானம் கொடுக்கும்
விதைக்கிற விதை தான் முளைக்கும்
இதுதான் இயற்கை நியதி
இதுதான் இயற்கை நியதி   (அடிக்கிற)

No comments:

Post a Comment