!- START disable copy paste -->

Friday, May 15, 2015



38.அடி வெளுத்து போச்சு


வருடம்  
1990                                                     
பாடலாசிரியர்
வாலி     
படம்   
நடிகன்            
இசை
இளையராஜா                 
பாடியவர்
எஸ்.பி.பி & சித்ரா

.        
                              
                                                        பாடல் வரிகள்

வாத்தியாரு பாட்டு வாத்தியாரு
சூட்டு கோட்டு மட்டும் மாட்டுவாரு
சரிகம போய் படிப்போமா
சங்கதியில் போய் குளீப்போமா
ஐய்யய்யா ஐய்யாய்யாஆஆஆஆ

அடி வெளுத்துப் போச்சு தாடி
ரொம்ப  உளூத்துப் போச்சு பாடி
இப்ப சுருங்கிப்  போச்சு நாடி
இவர் ஜெயிக்கப் போறார் பாடி

பார்ப்போமா உங்க எட்டுக் கட்டை சாரீரம்
கேட்போமா உங்க தட்டுக் கெட்ட  சங்கீதம்
ஆத்தாடி அப்படி போடு வீராப்பு காட்டி இந்த
தாத்தா தான் பொண்ணுங்களோடு போட்டாரே போட்டி  (அடி)

வீரம் சங்கீதம்  என் பாட்டன் சொத்து
ஞானம் உண்டாகும்  என் வீட்டை சுத்து
போதும் உன் பாட்டு நிப்பாட்டு இப்போ
ஆசையில் செம்மாங்குயில் ஆனது எப்போ

பைரவி, ரஞ்சனி, செஞ்ருட்டி
என்னிடம் நின்றிடும் கையக்கட்டி
வெச்சிக்க வெச்சிக்க  மூட்டைக்கட்டி
உன்னிடம் உள்ளது ஓட்டச் சட்டி

பணக்காரன் பெத்துப் போட்ட.. சீமாட்டியேஏஏ
வரலாமா  நம்மகிட்ட வாலாட்டியே
அடியே நீ  கேட்டுப் பாரேன்  ஆலாபனை
கழுதைக்கு தெரியாதம்மா பூ வாசனை


குதிரை வாலு கொண்டை
இது கிட்டப்பாவின் தொண்டை
நீங்க வெச்சுக்காதே சண்டை
அடி வீங்கிப் போகும் மண்டை

கூவாதே வெறும் கூச்சல் வேணாம் இப்போது
தாவாதே எதிர் நீச்சல் போடு என்னோடு
ஆத்தாடி அப்படி போடு வீராப்பைக் காட்டி
அடி கூத்தாடி குப்புற சாய்ஞ்சி போடாதே போட்டி

மூக்கும் புல்லாக்கும் ஏன் மோதுதடி
மோகம் உண்டாகும் என் பாட்டு படி
மாட்டுப் புண்ணாக்கு உன் பாட்டுகள் தான்
போடு உன் வாய்க்கு  நீ பூட்டுகள் தான்

முட்டையை விக்குற  கோழிகளா
வித்திட  என்னிடம் வாரீகளா
பட்டதும் சுட்டதும் பத்தலையா
புத்தியும் இன்னமும் முத்தலையா

பியூசி, பிஎஸ்சி தான் என்னாச்சுடி
ஏபிசி தெரியாமதான் நின்னாச்சுடி அடி
மரவட்டை ரெயிலப்  போல ஓடாதடி..ஹ்ஹூ
கொசுவெல்லாம் குயிலப் போல பாடாதடி   (குதிரை)

No comments:

Post a Comment