37.அடி லீலா கிருஷ்ணா ராதா
வருடம்
|
1978
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
படம்
|
அந்தமான்
காதலி
|
இசை
|
எம்.எஸ்.விஸ்வநாதன்
|
பாடியவர்
|
டி.எம்.எஸ்.
|
பாடல் வரிகள்
அடி லீலா கிருஷ்ணா
ராதா ரமணி ஜிகினா ரங்கம்மா
ஒரு நாளா பொழுதா
ராஜா வந்தா போவது எங்கம்மா
பாடும் புல் புல்
பாவைகளா அதுதான் உங்கள் சேவைகளா
பாடும் புல் புல்
பாவைகளா அதுதான் உங்கள் சேவைகளா (அடி லீலா)
பூவா குழலி
என்னிடம் வந்தால் பொன்னாரம் கொடுப்பேன்
பூஜை அறையில் ஆசை
கலையில் புது வேதம் படிப்பேன்
ஏனடி அழகுப்
பெண்ணே பாரடி அபலைப் பெண்ணே
கையில் இல்லாத
குற்றம் தானே கேட்டாய் பொன்னை
அடி ரங்கன்
சிங்கன் சுப்பன் வரிசையில் என்னை சேர்த்தாயோ
நான் நாளது
வரையில் ராதாகிருஷ்ணன் சொன்னேன் கேட்டாயோ
பாடும் புல் புல்
பாவைகளா அதுதான் உங்கள் சேவைகளா
பாடும் புல் புல்
பாவைகளா அதுதான் உங்கள் சேவைகளா (அடி லீலா)
ஒவ்வொரு பூவில்
ஒவ்வொரு வாசம் ஆளைத் தேடுதடி
ஒயிலாம் நடையும்
முகிலாம் ஜடையும் ஊஞ்சல் போடுதடி
நீயொரு பருவச்
சோலை நான் ஒரு இளமைச் சாலை
வாழ்வில் தினமும்
ஒன்றாய் தேடிக் கொண்டால் ஏனடி பூமாலை
அடி ஒருநாள் ராணி
அருகே வாடி காலம் போகுதடி
நான் ஓடை நீரில்
ஆடிட வேண்டும் கோடை காலமடி
பாடும் புல் புல்
பாவைகளா அதுதான் உங்கள் சேவைகளா
பாடும் புல் புல்
பாவைகளா அதுதான் உங்கள் சேவைகளா (அடி லீலா)
No comments:
Post a Comment