!- START disable copy paste -->

Friday, May 15, 2015



36.அடி போடி பைத்தியக்காரி


வருடம்  
1968                                                       
பாடலாசிரியர்
கண்ணதாசன்
படம்    
தாமரை நெஞ்சம்                 
இசை
எம்.எஸ்.விஸ்வநாதன்            
பாடியவர்
பி.சுசீலா எல்.ஆர்.ஈஸ்வரி

.

                       பாடல் வரிகள்

அடி போடி பைத்தியக்காரி
நான் அறியாதவளா சின்னஞ் சிறுசா

அடி போடி பைத்தியக்காரி
நான் அறிந்தவள்தான்  
உன்னைத் புரிந்தவள் தான்  (அடி போடி)

நினைத்ததெல்லாம் முடித்து விட்டேன்
இனி வேறு ஆசை இல்லை
நிலை மாறப் போவதில்லை
நிழல் தேடும் எண்ணம் இல்லை..
நிழல் தேடும் எண்ணம் இல்லை  (அடி போடி)

இறைவன் ஒரு நாள் தூங்கி விட்டான்
எழுத்தைக் கொஞ்சம் மாற்றி விட்டான்
எழுத்தைக் கொஞ்சம் மாற்றி விட்டான்
எழுதும் கதையை மாற்றி எழுத
என்னை இங்கே தூது விட்டான்
உன்னை கண்டு பேச விட்டான்  (அடி போடி )

கண்கள் அருகே இமை இருந்தும்
கண்கள் இமையைப் பார்த்ததில்லை
கண்கள் இமையைப் பார்த்ததில்லை
இந்த உவமை கொஞ்சம் புதுமை
இன்னும் உனக்கேன் புரியவில்லை
வேறென்ன சொல்வேன் தெரியவில்லை (அடி போடி)

விளக்கின் ஒளியாய் நீ இருந்தால்
விழுந்த நிழலாய் நான்  இருப்பேன்
நிழலும் ஒளியும் சேர்வதில்லை
நிலவும் வானும் பிரிவதில்லை
தியாக நெஞ்சம் தெய்வ நெஞ்சம்  
நானும் தெய்வம் ஆவேனோ
நான்  பாதை மாறி போவேனோ (அடி போடி)

No comments:

Post a Comment