33.அடி கண்மணி வண்ண
வருடம்
|
1978
|
பாடலாசிரியர்
|
வாலி
|
படம்
|
அவள் ஒரு அதிசயம்
|
இசை
|
விஜயபாஸ்கர்
|
பாடியவர்
|
எஸ்.பி.பி.
& பி.சுசீலா
|
பாடல் வரிகள்
அடி கண்மணி வண்ண பைங்கிளி
சின்ன பூங்கொடி என்னை தாங்கடி
இந்த நேரம் என்ன நாணம்
காதல் வரும் சொல்லாது கட்டுக்காவல் இல்லாது
அம்மம்மா பொல்லாது அச்சம் வெட்கம் கொள்ளாது
வார்த்தை ஏது எடுத்துச் சொல்ல (அடி)
மன்மதனின் சங்கீதம் மஞ்சம் எங்கும் முழங்கட்டும்
மஞ்சள் முகம் காதோடு மந்திரங்கள் வழங்கட்டும்
பூவை கொஞ்சம் கிள்ளாமல் தேவன் கைகள்
அணைக்கட்டும்
பொங்கி வரும் பன்னீரில் பொன்மலரை நனைக்கட்டும்
செவ்விளநீரும் தேன்கனி சாரும்
சேர்ந்த வண்ணம் சுவைப்பதென்ன (அடி)
அன்னை என்று ஆகாமல் பொம்மை பிள்ளை பிறந்தது
என்னை எட்டி பார்க்காமல் சேலைக்குள்ளே மறைந்தது
உன்னை அள்ளி தாலாட்ட உள்ளம் இன்று துடிக்குது
பக்கம் வந்து நின்றாலும் வெட்கம் இன்னும்
நடிக்குது
மாலைகள் சூடி மணவறை தேடி
மீதி கதையை முடித்திடலாம் (அடி)
No comments:
Post a Comment