!- START disable copy paste -->

Friday, May 15, 2015



32.அடி ஏண்டி அசட்டு


வருடம்  
1969                            
பாடலாசிரியர்
வாலி        
படம்    
கன்னிப்பெண்                 
இசை
எம்.எஸ்.விஸ்வநாதன்                                
பாடியவர்
எல்.ஆர்.ஈஸ்வரி & பி.சுசீலா   

                            
                            பாடல் வரிகள்

அடி ஏண்டி அசட்டுப்பெண்ணே உன்
எண்ணத்தில் யாரடி கண்ணே
வானத்து சந்திரனோ வடிவத்தில் சுந்தரனோ
யாராயிருந்தாலும் என்ன

அடி ஏண்டி அசட்டுப்பெண்ணே உன்
எண்ணத்தில் யாரடி கண்ணே
வானத்து சந்திரனோ வடிவத்தில் சுந்தரனோ
வந்தாலும் இடமில்லை சொன்னேன்

உள்ளத்தை தொட்டால் உண்டாவது
கை தொட்டதும் எண்ணம் ஒன்றாவது
ஆசை ஊஞ்சல் ஆடும் பாவை காதல் நெஞ்சம்
தாபத்தில் தானின்று தள்ளாடுது

மை வைத்த கிண்ணம் கண்ணல்லவோ நீ
பொய் வைத்து சொல்லும் பெண்ணல்லவோ
மாலை சூடும் தோளில் ஆடும் காலம் நேரம்
தெய்வத்தை கேட்டிங்கு நான் சொல்லவோ
தெய்வத்தை கேட்டிங்கு நான் சொல்லவோ  (அடி)

சித்திரக் கன்னம் புண்ணாகவே உன்
சிற்றிடை கொஞ்சம் திண்டாடவே
பாலும் தேனும் மேலும் மேலும் ஊறும் நேரம்
பூ மேனி பன்னீரில்  நின்றாடுமே

இன்பத்தின் பாதை  நீ கண்டது என்
எண்ணத்தின் எல்லை யார் கண்டது
பாசம் நேசம் தியாகம் பண்பு நாலும் கொண்டு
வாழ்கின்ற ஆனந்தம் நான் கண்டது
வாழ்கின்ற ஆனந்தம் நான் கண்டது   (அடி)






No comments:

Post a Comment