!- START disable copy paste -->

Friday, May 15, 2015



31.அடி என்னோட வாடி


வருடம்       
1979
பாடலாசிரியர்
கங்கை அமரன்  
படம்   
ஒரு விடுகதை ஒரு தொடர்கதை 
இசை
கங்கை அமரன்     
பாடியவர்
எஸ்.பி.பி & எஸ்.பி.ஷைலஜா 

                       
                 பாடல் வரிகள்

அடி என்னோட வாடி அந்த ஆத்தோரமா
தென்னந்தோப்போரமா ரொம்ப நாளாச்சு வாடி
என் ராசாத்தியோ புது ரோசாச்செடி
நான் உன்னோட ஜோடி ஐயோ........அம்மா  (அடி)

வீட்டிலிருக்கிற தொல்லையைப் பார்த்தேன்
வெட்ட வெளியில் மெத்த ஒண்ணு போட்டேன்
பாட்டுப் படிக்க கூட உன்ன சேர்த்தேன்
பட்டு ஒடம்ப கட்டி அணைப் போட்டேன்

யாரும் பார்த்தால் ஏதாச்சும் நடக்கும்
வேணாங்க தள்ளு மாமா
வீட்டுக்குள்ள நடக்கிறதெல்லாம்
வெட்டவெளி பார்க்கலாமா

அட ஹுஹுஹும் வேணாம் நாம பாக்காததா
கண்ணு பழகாததா சொன்னா கேட்டு நட மாமா
என் ராஜாக்கண்ணு உன் மாமாப்பொண்ணு
வேகம் என்ன சுத்து மாமா அட ஹுஹுஹும் வேணாம்

ஒரு புறம் பார்த்தால் நீ ஜெயபாதுரி
ஓரக்கண் பார்த்தாய் ஜீனத்தை மாதிரி
நடையினை பார்த்தால் நீ ஜெயமாலினி
நாயகி நீ என் ஹேமமாலினி கே ஆர் விஜயா எம் ஆர் ராதிகா

அமிதாப்பை போலவே அழகான ரூபம்
அமோல்பாலேகர் போலவே வந்த தேவனே
கமலின் அழகும் ரஜினி ஸ்டையிலும் இணைந்ததொரு
எவரும் மயங்கும் இளமை துடிக்கும் கலைமகன்

மாவீரன் தர்மேந்திரா ஜிதேந்திரா
என்னை மயக்கும் மன்னன் நீதானே
உனை எந்நாளும் காணும் என் கண்ணால்தானே
இனி என்ன உனக்கிந்த மான்தானே..........
ஐயையோ............அம்மம்மா...........
மாவீரன் தர்மேந்திரா ஜிதேந்திரா
என்னை மயக்கும் மன்னன் நீதானே......

No comments:

Post a Comment