!- START disable copy paste -->

Friday, May 15, 2015


29.அடி என்னடி ராக்கம்மா (சோகம்)


வருடம்  
1972                                        
பாடலாசிரியர்
கண்ணதாசன்                
படம்     
பட்டிக்காடா பட்டணமா                  
இசை
எம்.எஸ்.விஸ்வநாதன்                       
பாடியவர்
டி.எம்.எஸ்

.

                          பாடல் வரிகள்

அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
கண்ணீரில் நனையுதடி  (அடி என்னடி)

கல்யாண மேளங்கள் மணியோசை
என் கவலைக்கு தாளமடி
சொல்லாத எண்ணங்கள் பலகோடி
என் துன்பத்தின் தீபமடி

பொன்னாக நான் நினைத்த மண் வீடு கரைந்து
தண்ணீரில் கலந்ததடி
என் பட்டம் என் திட்டம் என் சட்டம்
அடி ராக்கம்மா காற்றாக பறந்ததடி
காற்றாக பறந்ததடி  (அடி என்னடி)

எல்லோர்க்கும் ஊர்கோலம் இரண்டு தரம்
அதில் ஒரு கட்டம் முடிந்ததடி
தாயார்க்குப் பின்னாலே சம்சாரம் - அது
தடம் கொஞ்சம் புரண்டதடி

பண்பாடு காப்பதற்கு பெண் பார்த்து முடித்தேன்
என் பாடு மயங்குதடி
என் வீடும் என் வாழ்வும் ஒரு கோயில்
அடி ராக்கம்மா என் தெய்வம் சிரிக்குதடி

அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
கண்ணீரில் நனையுதடி

No comments:

Post a Comment