!- START disable copy paste -->

Friday, May 15, 2015


27.அடி ஆத்தாடி இளமனசு


வருடம்   
1986                                  
பாடலாசிரியர்
வைரமுத்து                  
படம்    
கடலோரக்கவிதைகள்              
இசை
இளையராஜா    
பாடியவர்
இளையராஜா & எஸ்.ஜானகி


                        பாடல் வரிகள்

அடி ஆத்தாடி இள மனசொன்னு
ரெக்ககட்டி பறக்குது  சரிதானா
அடி அம்மாடி ஒரு அலை வந்து
மனசுல அடிக்குது அதுதானா
உயிரோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம்
இவன் மேகம் ஆக யாரோ காரணம்   (அடி ஆத்தாடி)

மேல போகும் மேகம் எல்லாம்
கட்டுப்பட்டு ஆடாதோ
ஒன்ன பார்த்து அலைகள் எல்லாம்
மெட்டு கட்டி பாடாதோ
இப்படி நான் ஆனதில்ல புத்தி மாறிப் போனதில்ல
முன்ன பின்ன நேர்ந்ததில்ல மூக்கு நுனி வேர்த்ததில்ல

கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள
கத்திச்சண்ட கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள
பட்டாம்பூச்சி பார்த்தாயோ இசை கேட்டாயோ

தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோசம்
உண்மை சொல்லு பொண்ணே என்னை,
என்ன செய்ய உத்தேசம்

வார்த்த ஒண்ணு  வாய் வரைக்கும்
வந்து வந்து போவதென்ன
கட்டுமரம் பூப்பூக்க ஆசப்பட்டு ஆவதென்ன
கட்டுத்தறி காள நானே கன்னுக்குட்டி ஆனேனே
தொட்டுத் தொட்டு தென்றல் பேச
தூக்கங்கெட்டுப் போனேனே சொல் பொன்மானே (அடி ஆத்தாடி)

1 comment: