26.அடி காதலி என்னை
|
வருடம்
|
1971
|
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
|
படம்
|
அன்புக்கோர்
அண்ணன்
|
|
இசை
|
எம்.எஸ்.விஸ்வநாதன்
|
|
பாடியவர்
|
டி.எம்.எஸ்.
எல்.ஆர்.ஈஸ்வரி
|
பாடல் வரிகள்
அடி காதலி என்னைக்
காதலி
அடி காதலி என்னைக்
காதலி
என் காதலா இது
காதலா
என் காதலா இது
காதலா
எங்கும் காணாத
காதல் அல்லவோ
ஒரு கண் பார்க்க
வேண்டுமல்லவோ
ஒட்டு
மாமரம்.........ஒட்டு மாமரம்
ஒட்டி வைத்து
பார்க்கச் சொல்லும் நாடகம்
ஒட்டி வைத்து
பார்க்கச் சொல்லும் நாடகம் (அடி காதலி)
கம்பன் இப்போது இங்கே
வந்தாலும்
காதல் கவிதை
மாறும்
சீதையின்
கல்யாணராமன் பார்வை
ஜீவன் இல்லாது
போகும்
பாலும் பழமும்
உண்டெனச் சொன்னார்
பசியுடன் வந்தேன்
நானும்
பாவம் உனை நான்
பார்த்தேன் உடனே
பைத்தியம் ஆனேன்
நானும்
ஹ...ஹ...ஹா....ஹா...ஹ...ஹா (அடி காதலி)
கண்ணே உன்னோடு
சொந்தம் கொண்டாட
காதல் மனது கூறும்
முன்னால் இல்லாத
எண்ணம் பிறந்து
பெண்ணின் நிலைமை
மாறும்
ஏதோ நினைத்தேன்
வந்தது உறவு
எவரிடம் சொல்வேன்
நன்றி
எங்கும் இருப்பான்
இறைவன் அதனால்
இங்கே சொல்வோம்
நன்றி
ஹ...ஹ...ஹா....ஹா...ஹ...ஹா (அடி காதலி)
No comments:
Post a Comment