22.அடக்கிடுவேன் அடக்கிடுவேன்
வருடம்
|
1959
|
பாடலாசிரியர்
|
பட்டுக்கோட்டையார்
|
படம்
|
அவள்யார்
|
இசை
|
எஸ்.ராஜேஸ்வரராவ்
|
பாடியவர்
|
எஸ்.சி.கிருஷ்ணன் & டி.வி.ரத்தினம்
|
பாடல் வரிகள்
அடக்கிடுவேன் ஓய் அடக்கிடுவேன் ஓய்
அடங்காத காளையையும் அடக்கிடுவேன் கண்ணாலே
ஆட்டம் போடாதே ஓய் சாட்டையிருக்கு பின்னாலே
மிரட்டிடுவேன் ஏய் மிரட்டிடுவேன் ஏய்
மிரளாத உருவத்தையும் மிரட்டிடுவேன் கொம்பாலே
வீணாத் துள்ளாதே ஏய் வலைச்சிடுவேன் வாலாலே
துணிஞ்சு நின்னாப் புரிஞ்சிடுமே
புரியல்லையே.........
துணிஞ்சு நின்னாப் புரிஞ்சிடுமே உன்
சுறுசுறுப்பும் துடிதுடிப்பும் குறைஞ்சி போகுமே
நெருங்கி வந்தா விளங்கிடுமே உன்
விறுவிறுப்பும் பரபரப்பும் விழுந்து போகுமே
பிடிச்சேன்னா விடமாட்டேன் நான்
புண்ணாக்கும் தவிடும் வச்சு தண்ணியும்
காட்டிடுவேன்
வெறிச்சேன்னா ஆபத்துதான் – நான்
மேயாத பயிரையெல்லாம் மேஞ்சு காட்டிடுவேன்
No comments:
Post a Comment