21.அட ராஜாங்கம்
வருடம்
|
1982
|
பாடலாசிரியர்
|
முத்துலிங்கம்
|
படம்
|
ஊருக்கு ஒரு
பிள்ளை
|
இசை
|
எம்.எஸ்.விஸ்வநாதன்
|
பாடியவர்
|
எஸ்.பி.பி
|
. .
பாடல் வரிகள்
அட ராஜாங்கம் உன்
அதிகாரம் இன்னும்
எத்தனை நாளைக்கு
நடக்கும்
நாங்க துணிஞ்சாலே
உன்னை புரிஞ்சாலே
உன்னை ஊரு பார்த்து
சிரிக்கும்
நாங்க கலங்கரை
விளக்கு நீங்க களங்கத்தின் கணக்கு (அட)
குழந்தையாக
இருக்கும்போது வஞ்சங்கள் இல்லை இங்கு
கோபுரமாய்
வளந்தவர்க்கு நெஞ்சங்கள் இல்லை
தவழும் பிள்ளை
சிரிக்கையிலே இங்கு உதிர்வது முல்லை
தலைவனாகி
சிரிக்கையிலே வருவது தொல்லை
இங்கு பொய்மைகள்
இல்லை அங்கு உண்மைகள் இல்லை (அட)
தீபமில்லா
ஊருக்கெல்லாம் தீபத்தை தந்தேன் அந்த
தீபத்தையே
கல்லெறிந்து உடைத்திடவும் கண்டேன்
மல்லிகையை
பழிக்குதம்மா அரளியின் கூட்டம் இங்கு
மணமிழந்து
போய்விடுமோ மல்லிகைத் தோட்டம்
இங்கு பொய்மைகள்
இல்லை அங்கு உண்மைகள் இல்லை (அட)
காற்றை கையில்
பிடித்தடக்கும் மனிதர்கள் யாரு எந்த
காலத்திலும் என்னை
வெல்ல பிறந்தவர் யாரு
எந்தன் வாழ்வில்
துணையெனவே இருப்பது நீதி நான்
எதிர்ப்பையெல்லாம்
தூசியாக்கி மிதித்திடும் ஜாதி
இங்கு பொய்மைகள்
இல்லை அங்கு உண்மைகள் இல்லை (அட)
No comments:
Post a Comment