!- START disable copy paste -->

Friday, May 15, 2015


20.அட சரிதான் போடி



வருடம்  
1979                                               
பாடலாசிரியர்
வாலி
படம்    
பூவா தலையா           
இசை
எம்.எஸ்.விஸ்வநாதன்         
பாடியவர்
டி.எம்.எஸ். எல்.ஆர்.ஈஸ்வரி       

.   
                   
                      பாடல் வரிகள்

Shut up                  I  say you shut up
Get out                  I say you get out
I will cut you        I will kick you
I will beat you      I will teach you

அடி சரிதான் போடி வாயாடி
சண்டைக்கு நீயா சரி ஜோடி

அட சரிதான் போய்யா சிடுமூஞ்சி
சிரிச்சா போதும் அழுமூஞ்சு

ஆங்....மக்கு    ஆங் மண்டு
ஆங் குண்டு   ஆங் கோட்டான்
மானம் இருக்கா வீரம் இருக்கா
ரோஷம் இருக்கா தீரம் இருக்கா
உனக்கு........பெண்மை இருக்கா அட................. (சரிதான்)

பட்டிக்காட்டுப் பெண்ணா நான் குட்ட குட்ட குனிந்திருக்க
வெட்டிப் பேச்சுப் பயலா நான் எட்ட எட்ட பயந்து நிற்க
வேளைக்கெட்ட வேளையில நீ சேலைக் கிட்ட மோதாதே
மூளைக் கெட்டு போச்சு நீ மூக்கொடஞ்சு போகாதே

உன்னாலே ஆனா மட்டும் சொல்லிபாரு
துள்ளிப்பாரு நம்பக்கிட்ட நடக்குமா
என்னோடு மோத வந்தா பெண்ணழகு உன்னழகு
உள்ளபடி இருக்குமா
ஆஹாங் அஹங் ஆஹாங் அஹங்  (அட சரிதான்)

பத்ரகாளி போலே நீ கண்ண கண்ண உருட்டாதே
மதுர வீரன் போலே நீ சின்ன பொண்ண மெரட்டாதே
அத்த பெத்த மகளே நீ வித்தையெல்லாம் படிக்காதே
மெத்த படிச்ச மாமா நீ அத்துமீறி நடக்காதே
 
பொல்லாத வாய் கொடுத்து பொண்ணு வந்து
மாட்டிகிட்டு கண்ணு ரெண்டும் பிதுங்குது
இல்லாத ஆட்டமெல்லாம் ஆட வந்த
ஆம்பிள்ளைக்கு காலும் கையும் நடுங்குது
ஆஹாங் அஹங் ஆஹாங் அஹங்  (அட சரிதான்)




No comments:

Post a Comment