!- START disable copy paste -->

Sunday, May 24, 2015



162.அழகே நீ ஒரு கதை


வருடம்  
1971                                           
பாடலாசிரியர்
கண்ணதாசன்               
படம்     
தங்கைக்காக                          
இசை
எம்.எஸ்.விஸ்வநாதன்                      
பாடியவர்
பி.சுசீலா & எல்.ஆர்.ஈஸ்வரி

.
                          பாடல் வரிகள்

அழகே நீ உன் கதை சொல்லடி
அதுபோல் நானும் சொல்லுகிறேன்
அடிக்கடி உனக்கு ஆனந்த கிறுக்கு
பிடித்தது எதற்கு சொல்லடி எனக்கு (அழகே)

அத்தை மகன் தத்தையிடம்
ஆசை வைத்த கதை சொல்லவோ
பத்து தரம் முத்தமிட்டு பயணம்
போன கதை சொல்லவோ

இதயத்தை தொட்டு தொட்டு இழுத்துக்கொண்டோடி
இடையினில் என்னைவிட்டு பிரிந்து சென்றான்டி
ஓஓஓஒ...........பிரிந்து சென்றான்டி  (அழகே)

பிள்ளைக்குணம் கொள்ளை இட்டு
பேச போன இடம் என்னவோ
கள்ளத்தனம் முந்திக்கொண்டு
கட்டி போட்ட சுகம் என்னவோ

அடை மொழி சொல்லி சொல்லி விருந்து தந்தான்டி
யாரிடம் என்ன வந்து பறந்து சென்றானடி
ஓஓஓஓஓ...........பறந்து சென்றான்டி   (அழகே)

தினம் ஒரு கதை சொல்லி திருடிக் கொண்டான்டி
திருடிய சுகத்துக்கு உரிமை கொண்டான்டி
சிரிக்கின்ற சிரிப்பு நடிக்கின்ற நடிப்பு
யாருக்கு அழைப்பு சொல்லடி நீ எனக்கு  (அழகே)

No comments:

Post a Comment