161.அழகே உன் பெயர்தானோ
வருடம்
|
1973
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
படம்
|
இறைவன்
இருக்கின்றான்
|
இசை
|
சங்கர்கணேஷ்
|
பாடியவர்
|
எஸ்.பி.பி.
& பி.சுசீலா
|
பாடல் வரிகள்
அழகே உன்
பெயர்தானோ
அமுதே உன்
மொழிதானோ
நடந்தால்
சிந்துக்கவியோ நீ
அருந்தேன் தந்த
சுவையோ (அழகே)
தலைவா என்றது
நெஞ்சம்
தனியே நின்றது
கொஞ்சம்
இதுதான் பெண்ணின்
மனமோ
இது இயற்கை தந்த
குணமோ (அழகே)
பொன் பார்த்து
மயங்கும் உன் மேனி அழகை
கண்டாலும் போதை
தரும்
என் கையோடு குலுங்கும்
சங்கீத வளையல்
சிங்காரம் பாடி
வரும்
கம்பன் இன்று
இருந்தால்
அவன் உன்னை
அறிந்தால்
மனம் என்னென்ன பாட
நினைக்கும்
அதை இன்றிங்கு பாட
அழைக்கும் (தலைவா)
நில்லென்று
நிறுத்தி உன்னை
சில்லென்று தழுவிக்கொண்டு
பாடும் ராகங்கள்
என்ன
புன்னகை இதழ்
விரிக்கும் மல்லிகை சரம் தொடுத்து
சூட்டும் காலங்கள்
என்ன
கன்னிப்பூ உடலோ
அன்னத்தின் சிறகோ
பிள்ளைச் சொல்
மழலை பேசுவதோ (அழகே)
No comments:
Post a Comment