!- START disable copy paste -->

Sunday, May 24, 2015



159.அழகென்ன அறிவென்ன


வருடம்  
1965                                 
பாடலாசிரியர்
வாலி 
படம்   
அன்புக்கரங்கள்                    
இசை
ஆர்.சுதர்சன் 
பாடியவர்
பி.சுசீலா                         

   
                         பாடல் வரிகள் 

அழகென்ன...........அறிவென்ன ..............
உங்கள் அழகென்ன அறிவென்ன
மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா இரு
கண்ணிருக்க கண்ணருகே பெண்ணிருக்க
பெண்ணருகே கொஞ்சம் வரலாமா   (அழகென்ன)

காதளவு கண்கள் காலளவு கூந்தல்
பெண்ணழகு எங்கே பெண்ணழகு எங்கே
அந்தி பகல் துணையிருக்க ஆருயிராய் நானிருக்க
கோபங்கள் எங்கே வரும் கோபங்கள் எங்கே வரும் (அழ்ககென்ன)

திங்களுக்கு தங்கை தென்றலுக்கு தோழி
வஞ்சி இவள் வந்தேன் என்றால் வந்தேன் என்றால்
முத்து நகை சிந்தி விழ முந்தானை முந்தி விழ
ஆசைகள் தந்தேன் என்றாள் ஆசைகள் தந்தேன் என்றாள் (அழகென்ன)

ஆயிரத்தில் ஒன்று ஆணழகன் என்று
கன்னி மனம் இங்கே வரும் இங்கே வரும்
கொத்து மலர் பூத்திருந்தும் கொய்யாமல் பார்த்திருந்தால்
காலங்கள் சென்றே விடும் காலங்கள் சென்றே விடும் (அழகென்ன)                                                        



No comments:

Post a Comment