158.அழகுரதம் பொறக்கும்
வருடம்
|
1967
|
பாடலாசிரியர்
|
மாயவநாதன்
|
படம்
|
கற்பூரம்
|
இசை
|
ட்.பி.ராமச்சந்திரன்
|
பாடியவர்
|
தாராபூரம்
சுந்தர்ராஜன் & பி.சுசீலா
|
பாடல்
வரிகள்
அழகு ரதம்
பொறக்கும் அது
அசஞ்சி அசஞ்சி
நடக்கும்
தமிழைப்போல
இனிக்கும்
தகப்பன் போல
சிரிக்கும் (அழகு)
தத்தி தத்தி
நடக்கும்போது
பரதக்கலை
பிறக்கும் பொறக்கும்
தங்கச் சிலையை
அணைக்கும் போது
சந்தனம்போல்
மணக்கும்
முத்தெடுத்து
கொடுத்து வைத்த
சித்திரம்போல்
இருக்கும்
முப்பிறப்பில்
செய்ததெல்லாம்
மொத்தமாக
கிடைக்கும் (அழகு)
பின்னிவிட்ட
சடையினிலே
பூவைச் சூட்டுவேன்
அந்த
பிறை நிலாவைக்
காட்டி காட்டி
சோறு ஊட்டுவேன்
இரண்டு கையை
சேர்த்து
வைத்து
தொட்டிலாக்குவேன்
தெய்வம் எங்கே
என்று கேட்கும்போது
உன்னைக்
காட்டுவேன் (அழகு)
சின்ன சின்ன
கண்களுக்கு மையை தீட்டுவேன் அது
சிரிக்கும்போது
சிந்துவதை மாலை ஆக்குவேன்
மாலையாக்கி தருவதை
நான் உனக்கு சூட்டுவேன்
என் மனசை அன்புக்
கோவிலாக்கி சூடம் காட்டுவேன் (அழகு)
பாலோடு சேர்த்து
நம்ப பண்பை ஊட்டுவேன்
நம்ம பழைய கதையைச்
சொல்லி
நெஞ்சை
சுத்தமாக்குவேன்
ஆராரோ பாடும்போது
நானும் பாடுவேன்
ஆராரோ ஒ..ஆராரோ
ஓ.....ராரிராரி ராரோ ஆராரோ
No comments:
Post a Comment