157.அழகுக்கும் மலருக்கும்
வருடம்
|
1963
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
படம்
|
நெஞ்சம்
மறப்பதில்லை
|
இசை
|
விஸ்வநாதன்
ராமமுர்த்தி
|
பாடியவர்
|
பி.பி.ஸ்ரீநிவாஸ்
எஸ்.ஜானகி
|
..
பாடல் வரிகள்
அழகுக்கும்
மலருக்கும் ஜாதியில்லை -
நெஞ்சில்
ஆசைக்கும் உறவுக்கும் பேதமில்லை
இரவுக்கும் பகலிடம் கோபமில்லை - இந்த
ஏழையின் காதலில் பாபமில்லை (அழகுக்கும்)
ஒரு மாலையில் பலவித மலருண்டு - ஒரு
மனதினில் ஆயிரம் நினைவுண்டு - அந்த
ஆயிரம் நினைவுக்கும் அழகுண்டு - அது
காதலென்றால் அதில் கனிவுண்டு - இந்த
நெஞ்சினிலும் ஓர் நிழலுண்டு - அதில்
நீலப் பூவிழி மயிலுண்டு
ஆசைக்கும் உறவுக்கும் பேதமில்லை
இரவுக்கும் பகலிடம் கோபமில்லை - இந்த
ஏழையின் காதலில் பாபமில்லை (அழகுக்கும்)
ஒரு மாலையில் பலவித மலருண்டு - ஒரு
மனதினில் ஆயிரம் நினைவுண்டு - அந்த
ஆயிரம் நினைவுக்கும் அழகுண்டு - அது
காதலென்றால் அதில் கனிவுண்டு - இந்த
நெஞ்சினிலும் ஓர் நிழலுண்டு - அதில்
நீலப் பூவிழி மயிலுண்டு
எந்தன் தோட்டத்திலும் ஒரு துணையுண்டு
எந்தன் தோள்களிலும் ஒரு கிளியுண்டு (அழகுக்கும்)
எந்தன் தோள்களிலும் ஒரு கிளியுண்டு (அழகுக்கும்)
உந்தன் கண்ணிலும் முகத்திலும் ஓடிவரும் - இளம்
காற்றின் விலையே கோடி பெறும் உந்தன்
எண்ணத்தில் விழுந்தே ஆடி வரும் - அந்த
இன்பத்தின் விலையே கோடி பெறும்
நாம் ஒன்றுபடும் நாள் வந்துவிடும் உந்தன்
ஓரப் பார்வை வென்றுவிடும்
அந்தப்
பாதையெல்லாம் மலர் தூவி வரும்
இந்தப் பாவையுடன் எந்தன் ஆவி வரும் (அழகுக்கும்)
இந்தப் பாவையுடன் எந்தன் ஆவி வரும் (அழகுக்கும்)
No comments:
Post a Comment