155.அழகு விளையாட
வருடம்
|
1959
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
படம்
|
பாஞ்சாலி
|
இசை
|
கே.வி.மகாதேவன்
|
பாடியவர்
|
ஏ.எல்.ராகவன் & ஜமுனாராணி
|
.
பாடல் வரிகள்
அழகு விளையாட அமைதி உறவாட
அருவி இசைபாட
அழைத்திடுதே
அசையும் கொடியொன்று
அசையும் கொடியொன்று
குறும்புத் தனம்
கொண்டு
ஆட்டமும் காட்டி மறைந்திடுதே (அழகு)
ஆட்டமும் காட்டி மறைந்திடுதே (அழகு)
நிழல் போலக் கூடவே வரும்
விழிகள் ஏமாறுமா?
பழக்குலையை இலை மறைத்தாலும்
பழக்குலையை இலை மறைத்தாலும்
பசித்திருக்கும்
கிளி அறியாதா
மனதினிலே உள்ள மாறாத ஆசை
மனதினிலே உள்ள மாறாத ஆசை
வாக்கினிலே
வெளிப்படுதே
மாங்கனி முன்னே ஆண் கிளி ஜம்பம்
மாங்கனி முன்னே ஆண் கிளி ஜம்பம்
செல்லாமல் இப்போது
திண்டாடுதே (அழகு)
மாங்கனி நீ இனி மறைந்து போக முடியுமா
வாதமேன் நாமினி பிரிந்து வாழ முடியுமா?
கொஞ்சும் மொழியாலே இன்பம் கொண்டேனே....
அன்பு வலை வீசும் நெஞ்சைக் கண்டேனே... (அழகு)
No comments:
Post a Comment