!- START disable copy paste -->

Sunday, May 24, 2015




154.அழகு மலர் ஆட


வருடம்  
1984                                       
பாடலாசிரியர்
வைரமுத்து  
படம்    
வைதேகி காத்திருந்தாள்                    
இசை
இளையராஜா         
பாடியவர்
எஸ்.ஜானகி & டி.எஸ்.ராகவேந்திரா 


                    பாடல் வரிகள்
அழகு மலராட அபிநயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்
என் சிலம்பொலியும் புலம்புவது கேள்

விரல் கொண்டு மீட்டாமல்வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல்
கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு
இரு விழியில் வரும்பொழுது  (அழகு)

ஆகாயம் இல்லாமலே
ஒரு நிலவு தரை மீது தள்ளாடுது 
ஆதாரம் இல்லாமலே
ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது

தாளத்தில் சேராத தனிப்பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் துடிக்கின்றது
விடியாத இரவென்றும்  கிடையாது என்று
ஊர் சொன்ன வார்த்தைகள் பொய்யானது

வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெறுமா
ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்
பதில் ஏதும் இல்லாத கேள்வி (அழகு)

ஊதாத புல்லாங்குழல் ஒரு பொழுதும் 
சூடாத பூவின் மடல்
தேய்கின்ற மஞ்சள்  நிலா
ஒரு துணையைத் தேடாத வெள்ளைப் புறா

பூங்காற்றும் மெதுவாகப் பட்டாலும் போதும்
பொன்மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது
நீரூற்றுப் பாயாத  நிலம் போல நாளும்
என் மேனி தரிசாக இருக்கின்றது

தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை
வேறென்ன நான் செய்த பாவம்   (அழகு மலராட)


No comments:

Post a Comment