!- START disable copy paste -->

Sunday, May 24, 2015



150.அழகு ஒரு இராகம்


வருடம்   
1964                                                        
பாடலாசிரியர்
வாலி  
படம்    
படகோட்டி                         
இசை
விஸ்வநாதன் ராமமூர்த்தி               
பாடியவர்
பி.சுசீலா 


                                              பாடல் வரிகள்

அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம் - காதல்
பெண்பாவை கண்பார்வை பாட்டாகப் பாடும் - வண்ணப்
பொன்மேனி மேலாடை பூங்காற்றில் ஆடும்    (அழகு ஒரு)

தேன் வாழைகள் தந்த உதடுகள்
குளிர்ப் புன்னகை என்று மொழி பேசும்- பொன்
மானொன்று பெண்ணாக மாறிடக்
கண்ணாள மேடையில் தாவிடுதே
எனக்கும் உனக்கும் எதையும் மறக்கும்
மயக்கம் மயக்கம் இதுவோ   (அழகு ஒரு)

வாரமாலே வந்த ஆசைகள்
இளம் தோகையில் கண்கள் சதிராடும்
செந்தாமரைப் பெண்ணாக மாறிடக்
கண்ணாள ஓடையில் நீந்திடுதே
இளமை மயக்கும் இருக்கும் வரைக்கும்
பிறக்கும் பிறக்கும் சுகமோ     (அழகு ஒரு)

லலல்ல லால லாலலல்ல லாலா
லாலா லாலால லாலால லாலால லாலா
லால லாலால லாலால லாலால லாலா

No comments:

Post a Comment