148.அழகிருக்குது உலகிலே
வருடம்
|
1967
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
படம்
|
அனுபவி ராஜா
அனுபவி
|
இசை
|
எம்.எஸ்.விஸ்வநாதன்
|
பாடியவர்
|
டி.எம்.எஸ்.
& சீர்காழி கோவிந்தராஜன்
|
பாடல் வரிகள்
அழகிருக்குது
உலகிலே ஆசை இருக்குது மனதிலே
அனுபவிச்சா என்னடா
கண்ணு அனுபவிப்போம் நாம்
காணும் உலகம்
கையில் வராமல் வாலிபம் எதற்காக இங்கு
கடவுள் படைத்த
கலைகள் கூறும் உல்லாசம் எனக்காக
எதற்காக...................எனக்காக...........எதற்காக
.............நமக்காக.....(அழகிருக்குது)
பசுமையான
பார்வையோடு புதுமையான
பாவை ரெண்டு
போகுதே அஹ்..போகுதே
அருமையான நேரம்
என்று இளமையான
காளை ரெண்டு
ஏங்குதே அஹ் ஏங்குதே
பார்வையை பார்த்து
வைப்போமா
கேள்வியை கேட்டு
வைப்போமா
தருவதை வாங்கிக்
கொள்வோமா (அழகிருக்குது)
கருமையான கூந்தல்
பாதி கடையில்
வாங்கும் கூந்தல்
பாதி ஆடுதே அஹ் ஆடுதே
அழகு பாதி ஆடை
பாதி மறைவில்லாத
மேனி பாதி
மின்னுதே அஹ் மின்னுதே
பார்வையை பார்த்து
வைப்போமா
கேள்வியை கேட்டு
வைப்போமா
தருவதை வாங்கிக்
கொள்வோமா (அழகிருக்குது)
No comments:
Post a Comment