147.அழகிய மிதிலை
வருடம்
|
1962
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
படம்
|
அன்னை
|
இசை
|
ஆர்.சுதர்சன்
|
பாடியவர்
|
பி.பி.எஸ்.
& பி.சுசீலா
|
பாடல் வரிகள்
அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி
காத்திருந்தாள்
பழகிடும் ராமன்
வரவை எண்ணி
பாதையை அவள்
பார்த்திருந்தாள்
பாதையை அவள்
பார்த்திருந்தாள் (அழகிய)
காவியக் கண்ணகி
இதயத்திலே ஆ...
கனிந்தவர் யார்
இளம் பருவத்திலே
கோவலன் என்பதை
ஊரறியும்
சிறு குழந்தைகளும்
அவன் பேரறியும் (அழகிய)
பருவத்துப்
பெண்கள் தனித்திருந்தால்
பார்ப்பவர் மனதில்
என்ன வரும்
இளையவரென்றால் ஆசை
வரும்
முதியவர் என்றால்
பாசம் வரும் (அழகிய)
ஒருவரை ஒருவர்
உணர்ந்து கொண்டால்
உள்ளத்தை
நன்றாய்ப் புரிந்து கொண்டால்
இருவர் என்பது
மாறிவிடும்
இரண்டும்
ஒன்றாய்க் கலந்து விடும் (அழகிய)
No comments:
Post a Comment