144.அழகி ஒருத்தி இளநீ
வருடம்
|
1978
|
பாடலாசிரியர்
|
வாலி
|
படம்
|
பைலட்
பிரேம்நாத்
|
இசை
|
எம்.எஸ்.விஸ்வநாதன்
|
பாடியவர்
|
பி.ஜெயச்சந்திரன்
& எல்.ஆர்.ஈஸ்வரி
|
.
பாடல் வரிகள்
அழகி ஒருத்தி இளநீ
விக்கிறா கொழும்பு வீதியிலே
அருகில் ஒருத்தன்
உருகி நிக்கிறான் குமரி அழகிலே
அக்கா மவ கண்ண
அடிச்சா
மாமன்காரன் கையை
பிடிச்சான் (அழகி)
உப்பு கடலோரம் ஒரு
ஜோடி நண்டு
ஓடி உறவாடி
விளையாடக் கண்டு
மாமன் தோள் மீது
கைப்போட்டு கொண்டு
மெல்ல நடந்தாளாம்
இள வாழந்தண்டு
ஹே.. வெள்ளி மணல்
மெத்தை விரிக்க
வந்தாளம்மா பாடம்
படிக்க
ஓடை மீனாட்டம்
ஓயாமல் துள்ளும்
ஓரக்கண் பார்வை
ஒரு பாட்டு சொல்லும்
ஆசை தாளாமல்
அலைபாயும் நெஞ்சம்
அன்னக்
கிளியாட்டம் அத்தானை கொஞ்சும்
மஞ்சள் முகம்
செக்கசிவக்கும்
அம்மாடியோவ்
வெட்கம் இருக்கும் (அழகி)
No comments:
Post a Comment