!- START disable copy paste -->

Sunday, May 24, 2015



140.அழகான மலையாளம்


வருடம்  
1964                            
பாடலாசிரியர்
கண்ணதாசன்       
படம்    
வாழ்க்கை வாழ்வதற்கே       
இசை
எம்.எஸ். விஸ்வநாதன்                               
பாடியவர்
எல்.ஆர்.ஈஸ்வரி  

                            
                            பாடல் வரிகள்

பச்சை குத்தலையோ..........பச்சை குத்தலையோ.....

அழகான மலையாளம் மலையாளக் கரையோரம்
கரையோரம் மேற்கு மலை மேற்கு மலை எங்கள் மலை
ஊசி இலைக் காடுகளில் வாசம் செய்யும் ஜாதியம்மா
மாசு பட சம்மதியோம் மான் ஜாதி கூட்டம் அம்மா  (அழகான)

பச்சை இலை வெட்டி வந்து பாலெடுத்து மை வடித்து
அச்சடிக்கும் முத்திரைகள் மாறாதம்மா
மானெழுதி மீனெழுதி வண்ண மயில் பாம்பெழுதி
நான் எழுதும் ஓவியங்கள் போகாதம்மா
நீரினிலே கரைவதில்லை நெருப்பினிலே எரிவதில்லை
இளமையிலே தீட்டிய பச்சை இறுதிவரை அழிவதில்லை (அழகான)

பெற்றவரை விட்டு விட்டு சென்று விட்ட பிள்ளைகளை
கண்டுக் கொள்ள போடுவது பச்சை அம்மா
சுற்றி வரும் தேவதைகள் பற்றாமலே இருக்க
குத்தி வைக்கும் மந்திரமே பச்சை அம்மா
சாமி பேர் எழுதி வைத்தால் தலைமுறைக்கு காவல் வரும்
தேவி பேர் எழுதி வைத்தால் தினம் தினமும் துணை இருக்கும் (அழகான)


No comments:

Post a Comment