!- START disable copy paste -->

Sunday, May 24, 2015



141.அழகான மேனி சுருதி


வருடம்       
1977
பாடலாசிரியர்
வாலி         
படம்   
ஆசை மனைவி                    
இசை
சங்கர் கணேஷ்  
பாடியவர்
எஸ்.பி.பி.


                         பாடல் வரிகள்

அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம்
சுகமான ராகம் நான் பாட வேண்டும்
அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம்

இடையோடு கை சேர்க்கும் போது
இதழோடு இதழ் சேர்க்கும் போதை
ஆடை தடை போடும்
விரல் தானாகவே தந்தி மீட்டும்
காதல் தரும் கூடல் என்றும்
தானாக சொர்க்கங்கள் காட்டும்  (அழகான)

கன்னங்கள் மெதுவாக சேரும்
கல்யாண அங்கங்கள் கூடும் சூடா என துள்ளும்
அது ஆறாத தாகத்தைக் காட்டும்
போதும் என்று கூறும் அது போதாது எனும் ஆசை காட்டும்

பதமான பாராட்டு கேட்கும்
இரவோடு கண்ணாடி பார்க்கும்
காலை எழும் ஜோடி அது தண்ணீரில் நீராடி ரசிக்கும்
காயம் சில கண்டு அது தானாக தனக்குள்ளே சிரிக்கும் (அழகான)

No comments:

Post a Comment