!- START disable copy paste -->

Sunday, May 24, 2015



135.அழகாக கண்ணுக்கு


வருடம்     
1971                                      
பாடலாசிரியர்
கண்ணதாசன்
படம்   
ஆதிபராசக்தி                      
இசை
கே.வி.மகாதேவன் 
பாடியவர்
எஸ்.ஜானகி


                        பாடல் வரிகள்

அழகாக கண்ணுக்கு அழகாக
கற்பகச் சோலை கன்னி வந்தாள்
கண்ணுக்கு அழகாக கண்ணுக்கு அழகாக
நினைவாக பெண்ணின் நினைவாக – இங்கே
கண்கள் நான்கும் மயங்குதம்மா
பெண்ணின் நினைவாக பெண்ணின் நினைவாக (அழகாக)

மோக கவிதைக்கு முன்னுரை கேட்டிடும்
நாதச் சலங்கைகள் கொண்டு
மலர் செண்டு மணம் கொண்டு
முத்துப் பதித்தொரு ரத்தினப்பல்லக்கு
வந்ததுப்போல் வந்து நின்று
வட்டமிடுவதை தட்டிப்பறித்திட
வாடுது உள்ளங்கள் ரெண்டு        (அழகாக)

நீருண்ட மேகத்தின் ஊர்வலம் போல் வந்து
சீர்க்கொண்ட கூந்தலைக் கண்டு
மது உண்டு மணம் கொண்டு
மஞ்சள் முகத்தினில் மாணிக்க மூக்குத்தி
கொஞ்சிடும் ஜோதியில் நின்று
தஞ்சம் அடையவும் தம்மை மறக்கவும்
கெஞ்சுது உள்ளங்கள் ரெண்டு     (அழகாக)

No comments:

Post a Comment