!- START disable copy paste -->

Sunday, May 24, 2015



136.அழகாக சிரித்தது அந்த


வருடம்  
1986                                                   
பாடலாசிரியர்
வாலி     
படம்   
டிசம்பர் பூக்கள்           
இசை
இளையராஜா                  
பாடியவர்
ஜெயச்சந்திரன் & எஸ்,ஜானகி            

                                                      
                    பாடல் வரிகள்

அழகாகச் சிரித்தது அந்த நிலவு
அதுதான் இதுவோ
அனலாகக் கொதித்தது இந்த மனது
இதுதான் வயதோ

மழைக்காலத்தில்
லலலலலா
நிழல் மேகங்கள்
லலலலலா
மலையோரத்தில்
லலலலலா
சிறு தூறல்கள்
லலலலலா
இளவேனிற்காலம் ஆரம்பம்
லலலல லலலல            (அழகாகச்)

நதியே நீராடத்தான் உன்னை அழைத்தேன்
பூவே நான் சூடத்தான் நாள் பார்த்தேன்
நாணல் நானாகத்தான் காத்துக் கிடந்தேன்
காற்றே உனைப் பார்த்ததும் கை சேர்த்தேன்

மானே உன் அழகினில் நானே ஓவியம் வரைந்தேனே
கண் ஜாடை சொல்ல
நானே என் இதயத்தைத்தானே எடுத்துக் கொடுத்தேனே
நீ சொந்தம் கொள்ள

பனி தூங்கும் ரோஜாவே
எனை வாங்கும் ராஜாவே
ஒரு நாள் திருநாள் இதுதான் வரவோ..
நாணமென்ன அச்சமென்ன

(
அழகாகச் சிரித்தது அந்த நிலவு)

உன்னை நானல்லவோ கண்ணில் வரைந்தேன்
நாளும் என்னோவியம் நீதானே
கண்ணே உன் கண்ணிலே செய்தி படித்தேன்
காதல் போரட்டமே நான் பார்த்தேன்

மோகம் பொங்கி வரும் தேகம் கொண்டதொரு தாகம்
நான் பெண்ணல்லவோ
நானும் கொஞ்சிட அது தீரும் கட்டினில் இணை சேரும்
என் கண்ணலவா

இள மாலைப் பொழுதாக
இரு நெஞ்சம் இனிதாக
இனிமை வழியும் இளமை இதுவோ.. இரு விழி சிவந்திட

(
அழகாகச் சிரித்தது அந்த நிலவு)

No comments:

Post a Comment