!- START disable copy paste -->

Sunday, May 24, 2015



134.அழகன் முருகனிடம்



வருடம்     
1965                                    
பாடலாசிரியர்
வாலி 
படம்   
பஞ்சவர்ணக்கிளி                  
இசை
விஸ்வநாதன் ராமமுர்த்தி
பாடியவர்
பி.சுசீலா             

.             
                         பாடல் வரிகள்
சத்தியம் சிவம் சுந்தரம் ஆ...ஆ...ஆ...ஆ...ஆ..
சரவணன் திருப்புகழ் மந்திரம்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ஆ...ஆ...ஆ...ஆ...ஆ..

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன்
அவன் அருளை பெறுவதர்க்கே உயிர் வளர்த்தேன்... ... (அழகன்)

பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்சோலையிலே......
கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்துவிட்டான்
பன்னிரெண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை
வள்ளல்தான் ஆள வந்தான் பெண்மையை வாழவைத்தான்
பெண்மையை வாழவைத்தான் ......    (அழகன்)

மலைமேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ
மெய்யுருக பாட வந்தால் தன்னைதான் தருபவனோ
அலைமேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
அய்யன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
அழகுக்கு அழகானேன்... ...     (அழகன்)




No comments:

Post a Comment