!- START disable copy paste -->

Sunday, May 24, 2015



133.அவனுக்கென்ன தூங்கி



வருடம்  
1963                          
பாடலாசிரியர்
கண்ணதாசன்
படம்    
பெரிய இடத்து பெண்          
இசை
விஸ்வநாதன் ராமமூர்த்தி    
பாடியவர்
டி.எம்.எஸ்.

.                             
                            பாடல் வரிகள்

அவனுக்கென்ன தூங்கிவிட்டான் ...
அகப்பட்டவன் நான் அல்லவா
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்
கைகளிலே போட்டு விட்டான்  (அவனுக்கென்ன)

இவனுக்கென்று எதை கொடுத்தான்
எலும்புடனே சதை கொடுத்தான்
இதயத்தையும் கொடுத்துவிட்டு
இறக்கும் வரை துடிக்க விட்டான்
இறக்கும் வரை துடிக்க விட்டான்    (அவனுக்கென்ன)

யானை இடம் நன்றி வைத்தான்
காக்கை இடம் உறவு வைத்தான்
மான்களுக்கும் மானம் வைத்தான்
மனிதனுக்கு என்ன வைத்தான் ?
மனிதனுக்கு என்ன வைத்தான்   ( அவனுக்கென்ன)

வானில் உள்ள தேவர்களை
வாழவைக்க விஷம் குடித்தான்
நாட்டில் உள்ள விஷத்தை எல்லாம்
நான் குடிக்க விட்டுவிட்டான்
நான் குடிக்க விட்டுவிட்டான்   (அவனுக்கென்ன)

2 comments:

  1. Singer is TMS. (not P.Susheela) pl. correct it MAM

    ReplyDelete
  2. Sir
    I have corrected the mistake. thank u for your comments. nowadays i am not uploading any songs in this blog. I have started another website (tamilsongslyrics123.com)and at present i have uploaded lyrics for nearly 6000 songs. Kindly visit my website and give your feed back
    thanking you sir with regards, k.geetha

    ReplyDelete