132.அவன் போருக்கு போனான்
வருடம்
|
1964
|
பாடலாசிரியர்
|
கண்ணதாசன்
|
படம்
|
வாழ்க்கை
வாழ்வதற்கே
|
இசை
|
எம்.எஸ்.விஸ்வநாதன்
|
பாடியவர்
|
பி.சுசீலா
|
:
பாடல் வரிகள்
அவன் போருக்கு
போனான்
நான் போர்க்களம்
ஆனேன்
அவன் வேல் கொண்டு
சென்றான்
நான் விழிகளை
இழந்தேன் (அவன்)
அவன் காவலன்
என்றான்
நான் காவலை இழந்தேன்
அவன் பாவலன்
என்றான்
நான் பாடலை
இழந்தேன்
அவன் தேரும் வராதோ
ஒரு சேதி சொல்லாதோ
அவன் தோளும் வராதோ
ஒரு தூது சொல்லாதோ (அவன்)
எனை ஆடையில்
கண்டான்
பாவாடையில்
கண்டான்
மணமேடையை மறந்தான்
பூவாடையை மறந்தான்
என் மனம் அறிவானோ
திருமலர் கொடுப்பானோ
அவன் கண்
திறப்பானோ இரு கைக் கொடுப்பானோ (அவன்)
No comments:
Post a Comment