129.அவளுக்கென்ன அழகிய முகம்
வருடம்
|
1964
|
பாடலாசிரியர்
|
வாலி
|
படம்
|
சர்வர்
சுந்தரம்
|
இசை
|
விஸ்வநாதன்
ராமமுர்த்தி
|
பாடியவர்
|
டி.எம்.எஸ்.
எல்.ஆர்.ஈஸ்வரி
|
பாடல் வரிகள்
அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன இரவினில் வரும்
இரவுக்கென்ன உறவுகள் தரும்
உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும் (அவளுக்கென்ன)
ஹோ........அழகு ஒரு மேஜிக் டச்
ஹோ… ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்
ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
வா வா என்பதை விழியில் சொன்னாள்
மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள் (அவளுக்கென்ன)
அன்பு காதலன் வந்தான் காற்றோடு
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு
அவன் அள்ளி எடுத்தான் கையோடு
அவள் துள்ளி விழுந்தாள் கனிவோடு கனிவோடு (அவளுக்கென்ன)
சிற்றிடை என்பது – முன்னழகு
சிறு நடை என்பது – பின்னழகு
பூவில் பிறந்தது – கண்ணழகு
பொன்னில் விளைந்தது – பெண்ணழகு (அவளுக்கென்ன)
No comments:
Post a Comment