!- START disable copy paste -->

Sunday, May 24, 2015



128.அவளுக்கும் தமிழ்


வருடம்  
1965                         
பாடலாசிரியர்
வாலி                
படம்        
பஞ்சவர்ணக்கிளி                         
இசை    
விஸ்வநாதன் ராமமூர்த்தி   
பாடியவர்
டி.எம்.எஸ்.   

                          
                                                        பாடல் வரிகள்

அவளுக்கும் தமிழ் என்று பேர்  என்றும்
அவள் எந்தன் உள்ளத்தில் அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்  

அவ‌ளுக்கு நில‌வென்று பேர் வண்ண
ம‌ல‌ர் கொஞ்சும் குழ‌ல் அந்த‌ முகிலுக்கு நேர்
அவ‌ளுக்கு குயிலென்று பேர்  அந்தக்  
குயில் கொண்ட‌ குர‌ல் க‌ண்டு கொண்டாடும் ஊர்
அவ‌ளுக்கு அன்பென்று பேர்  

அவ‌ளுக்கு அன்பென்று பேர் - அந்த‌
அன்பென்ற‌ பொருள் ந‌ல்ல‌ பெண்மைக்கு வேர்
பெண்மைக்கு வேர்

(அவளுக்கும் தமிழ் என்று பேர் )

அவள் எந்தன்  அறிவுக்கு நூல் அவள்
மொழிகின்ற‌ வார்த்தைக‌ள் க‌விதைக்கு மேல்
க‌விதைக்கு மேல் !
அவ‌ளுக்கு அழ‌கென்று பேர் - அந்த‌
அழ‌கெந்த‌ன் உள்ள‌த்தை உழுகின்ற‌ ஏர்
உழுகின்ற‌ ஏர்

(அவளுக்கும் தமிழ் என்று பேர் )

அவ‌ளுக்கு உயிரென்று பேர் - என்றும்
அவள் எந்தன்  வாழ்வென்னும்
வ‌ய‌லுக்கு நீர் வ‌ய‌லுக்கு நீர்
அவள் எந்தன்  நினைவுக்குத் தேன் -இந்த‌
ம‌ன‌மென்னும் க‌ட‌லுக்கு க‌ரைக‌ண்ட‌ வான்

(அவளுக்கும் தமிழ் என்று பேர்)


2 comments:

  1. அருமையான் பாடல்.

    ReplyDelete
  2. அருமையான கவிதை வரிகளைக்கொண்ட தமிழுக்கு புகழ் சேர்க்கும் காதல் பாடல் !!

    ReplyDelete