127.அவளா சொன்னாள் இருக்காது
வருடம்
|
1974
|
பாடலாசிரியர்
|
வாலி
|
படம்
|
செல்வம்
|
இசை
|
கே.வி.மகாதேவன்
|
பாடியவர்
|
டி.எம்.எஸ்.
|
.
பாடல் வரிகள்
அவளா சொன்னாள்
இருக்காது அப்படி எதுவும் நடக்காது
நடக்கவும் கூடாது
நம்ப முடியவில்லை இல்லை இல்லை
உள்ளத்தில் உள்ளது
உதட்டிலே வந்ததா
உதட்டிலே வந்தது
உள்ளமே நினைத்ததா (அவளா)
உப்பு கடல் நீரும்
சர்க்கரை ஆகலாம்
முப்பது நாளிலும்
நிலவைக் காணலாம்
சுட்ட உடல் கூட
எழுந்து நடக்கலாம்
சுட்ட உடல் கூட
எழுந்து நடக்கலாம்
நீ சொன்னது எப்படி
உண்மை ஆகலாம்
நம்ப முடியவில்லை
இல்லை இல்லை
அன்னை தந்த பால்
விஷமும் ஆகலாம்
என்னை பெற்ற தாய்
என்னைக் கொல்லலாம்
உன்னை மறந்து நான்
உயிரை தாங்கலாம்
உன்னை மறந்து நான்
உயிரை தாங்கலாம்
நீ சொன்னது எப்படி
உண்மை ஆகலாம்
நம்ப முடியவில்லை
இல்லை இல்லை
அவளா சொன்னாள்
இருக்காது அப்படி எதுவும் நடக்காது
நடக்கவும் கூடாது
நம்ப முடியவில்லை இல்லை இல்லை
No comments:
Post a Comment